வகைப்படுத்தப்படாத

அல்ஜீரிய ஜனாதிபதி இராஜினாமா…

(UTV|ALGERIAN) வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

82 வயதான இவர் அப்டெலாஸிஸ் போட்விலிக்கா ஐந்தாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு மக்களால் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இத்தோடு, பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அல்ஜீரிய இராணுவமும் அழைப்பு விடுத்திருந்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தில் புதிய முறைமைகளுடனான மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென அல்ஜீரிய இளைஞர்களால் வலியுறுத்தப்பட்ட நிலையில், 20 வருடங்களாக ஆட்சியிலிருந்த ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Emmy winning actor Rip Torn passes away at 88

Commander meets ‘Paada Yathra’ pilgrims in Yala

Update – ஜனாதிபதி பங்களாதேஸ் புறப்பட்டார்!