(UTV|COLOMBO) இன்று முதல் மேல்மாகாணத்தின் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மதுபானத்தை பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் கண்டறிய விரிவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து சபை அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ண இதுதொடர்பாக தெரிவிக்கையில் பயணிகளுக்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறதா என்பது தொடர்பிலும் முற்றுகை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கப்படுவது கட்டாயமாகும் .இருப்பினும் தற்பொழுது இது முறையாக இடம்பெறுவதில்லை என இவர் குறிப்பிட்டார். மேல்மாகாணத்தில் அனைத்து தனியார் பஸ்களுக்காக வழியுறுத்தப்பட்டுள்ள வர்ணங்களுக்கு அப்பால் வேறேதும் வர்ணங்கள் வழங்கப்பட்டிருந்தால் சரி செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பிலான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இன்று முதல் வழங்கப்படும் 3 மாத காலப்பகுதிக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.