வகைப்படுத்தப்படாத

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

(UTV|NEPAL) நேபாளத்தில் ஏற்பட்ட புயலுடன் கூடிய கன மழையால் 27 பேர் உயிரிழந்ததுடன், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 128 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாரா மாவட்டமே இவ்வாறு மழை மற்றும் புயலில் சிக்குண்டு கடுமையாக பாதிப்படைந்தது.

இதையடுத்து தேசிய அவசர மேலாண்மை மைய பிரிவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில்  தங்க வைத்துள்ளனர்.

 

 

 

Related posts

Annette Roque officially calls it quit with husband Matt Lauer

ISIS அமைப்புடன் தொடர்புடைய 155 பேர் கைது

ஈரானிய ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தயார்