சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 தொழிற்சங்க நடவடிக்கையில்…

(UTV|COLOMBO) எதிர்வரும் மாதம் 09 மற்றும் 10ம் திகதிகளில் கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 இனை பிரதிநிதித்துவப்படுத்தி சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

சுமார் 20 வருடங்களாக நிலவும் சம்பள முறைகேடுகள், ஓய்வூதியத்தினை பெற்றுக் கொள்ளல், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைக்கு அதிகமான மேலதிக வேலைகளில் இருந்து ஒதுங்குதல் மற்றும் கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

 

 

 

Related posts

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடைக்கு கொண்டுவர திட்டம்

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தயார் -உதய கம்மன்பில