வகைப்படுத்தப்படாத

முதல் குழந்தை பிறந்த 26 நாளில் மீண்டும் இரட்டைக்குழந்தை பெற்ற பெண்

(UTV|BANGLADESH) வங்காளதேசம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் அடுத்தடுத்து இரு மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

வங்காளதேசம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் அடுத்தடுத்து இரு மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

வங்காளதேசம் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதி. இங்குள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து இவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது ஆரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் நாள் ஆரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் (மார்ச் 22-ஆம் நாள்) அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆரிபாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில்., மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை தாங்கள் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்

12 feared dead after suspected arson attack on studio in Japan

400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு