(UTV|COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்காக புதிய இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும். புதிய கொடுப்பனவு மூலம் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கட்டணத்தை செலுத்தும் பணிகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியும் இந்த வசதி தற்பொழுது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரம் உண்டு. ஜாஎல சீதுவ கட்டுநாயக்க இடமாறும் மத்திய நிலையத்தில் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.