கிசு கிசு

பப்ஜி விளையாட்டுக்கு இப்படி ஒரு கட்டுப்பாடா?-புதிய தடையால் இளைஞர்கள் சோகம்.!

(UTV|INDIA) பிரபல மொபைல் கேம் PUBG-க்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி, அவர்கள் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தியர்களை ஒரு நாளில் 6 மணி நேரம் மட்டும் கேம் விளையாட அனுமதிக்க PUBG நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது PUBG மொபைல் கேம். இந்த கேமுக்கு இளைஞர்கள் மாணவர்கள் அடிமையாகி வருவதாக முதலில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கமைய  தூக்கமில்லாமல் தொடர்ந்து பல மணி நேரங்கள் கேம் விளையாடிய சிலர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, குஜராத்தின் பல்வேறு இடங்களில் PUBG கேம் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், கேம் மீது மற்ற மாநிலங்களும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க, கேமில் புதிய மாற்றம் ஒன்றை PUBG கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஒரு நாளில் 6 மணி நேரங்கள் மட்டுமே PUBG கேம் விளையாட முடியுமாம். 6 மணி நேரத்திற்கு மேல் விளையாடினால், “அடுத்த நாள் வாருங்கள்” என்ற நோட்டிபிகேஷன் வரும் என்று கூறப்படுகிறது.

அது தொடர்பாக ஒரு சிலர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து PUBG நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த அப்டேட் கேம் விளையாடுபவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், இந்தியாவில் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு எதிராக குரல் எழுப்பி வருபவர்களின் கோபத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற கட்டுப்பாடு பப்ஜி கேமுக்கு வந்தால், நிச்சயம் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

 

 

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் ஊரடங்கை வலியுறுத்தி அரசுக்கு கடும் கோரிக்கை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவு?

ஆமானு சொல்லு, இல்லைன்னு சொல்லு-சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்