கிசு கிசு

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி தேன் நிலவு நாளன்று நடந்த அசம்பாவிதம்…

(UTV|COLOMBO) குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போன்று கனவு கண்டு தேன் நிலவு நாளன்று மணமகனின் முகத்தில் மணமகள் நகத்தால் கீறிய சம்பவம் கண்டி பிரதேசத்தில் நடந்துள்ளது.

இவர்களின் திருமணம் கடந்த வார இறுதியில் அநுராபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து இருவரும் தேன் நிலவுக்காக கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நடு இரவில் மணமகன் முகத்தில் இரத்ததுடன் முழு ஹோட்டலுக்கும் கேட்கும் அளவில் பலமாக சத்தமிட்டு கொண்டு வரவேற்பறைக்கு ஓடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எதிர்பாராத விதமான சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மணமகன் மற்றும் மணமகளிடம் விசாரித்துள்ளனர்.

மணமகள் நித்திரையில் இருக்கும் போது குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போல் கனவு கண்டுள்ளதுடன் அந்த குள்ள மனிதனிடம் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்த தாக்குதல் நிஜமாகவே அருகில் உறங்கி கொண்டிருந்த மணமகனின் முகத்தை பதம் பார்த்துள்ளது.

இலங்கையில் பல இடங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக அண்மைய காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குள்ள மனிதர்கள் தம்மை தாக்கி விட்டு ஓடிச் சென்றதாக சில பெண்கள் கூறியிருந்தனர். இந்த செய்திகள் குறித்த மணமகளின் கனவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

 

Related posts

பிரதமருக்கு ஆதரவாகும் வாசு, வீரவன்ச மற்றும் கம்மன்பில

(VIDEO)-கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா?

ஹகீம் அணி சஜித்திற்கே ஆதரவு