சூடான செய்திகள் 1

இன்று(25) முதல் நாள்தோறும் சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை

(UTV|COLOMBO) இன்று(25) முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 8.30 முதல் 11.30 வரையும், அல்லது முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 வரையான காலப்பகுதியிலும், பிற்பகல் 2.30 முகல் மாலை 5.30 வரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மேலும் இரவு வேளையில் மாலை 06.30 இலிருந்து 07.30வரையும் அல்லது 07.30 முதல் 08.30வரை அல்லது 08.30 இலிருந்து 09.30 வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள மின்சார கேள்விக்கு மத்தியில் போதுமான அளவு மின்சார விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

தீபாவளியை முன்னிட்டு 15,000 ரூபாய் வீதம் முற்பணம் வழங்க அனுமதி

மோதரை – முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…

பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்