வகைப்படுத்தப்படாத

இறுதி மணித்தியாலம் வரை போராடப் போவதாக ஏஞ்சலா மேர்க்கல் தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட பிரெக்ஸிட்டுக்காகத் தாம் இறுதி மணித்தியாலம் வரை போராடப்போவதாக, ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மேர்க்கல் (Angela Merkel) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவினால் முன்வைக்கப்படும் திட்டம் எதுவாக இருப்பினும், அது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தமது பிரதிபலிப்பினை வௌியிட முயற்சிக்க வேண்டும் எனவும் ஏஞ்சலா மேர்க்கல் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, உடன்படிக்கையுடனோ, உடன்படிக்கையின்றியோ பிரித்தானியா வௌியேறுவதற்கு இன்னும் 10 நாட்கள் காலக்கெடு காணப்படுகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறித்த காலக்கெடுவினை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டாஸ்க்கிற்கு தெரேசா மே எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களையும் அவர் இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார்.

தெரேசா மேயின் பிரெக்ஸிட் முன்மொழிவுகள், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தாம் ஒழுங்கான பிரெக்ஸிட்டுக்காக போராடப் போவதாக ஏஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

தற்கொலை கடிதம் எழுத மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியையால் பரபரப்பு

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை