சூடான செய்திகள் 1

ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று!

(UTV|COLOMBO) மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்கள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை இன்றைய தினம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று நேற்று ஜெனீவா சென்றது.

இந்த குழுவில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு இன்றையதினம், மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் நிலைப்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையை மாநாட்டில் முன்வைக்கும்.

அதேநேரம் பிரித்தானியா தலைமையிலான ஐந்து நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான புதிய யோசனைக்கு இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கும் தீர்மானத்தில் எந்த மாற்றங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

 

Related posts

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்

இஸ்ரேலில் கட்டிட நிர்மாணத்துறையில் 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு..!