சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 4 வழக்குகளில் இருந்து விடுதலை

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 வழக்குகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீளப்பெற்றுக் கொண்டதை அடுத்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு இன்று(19) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவற்றை மீளப்பெற்றுக் கொள்வதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, குறித்த வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்ள பிரதான நீதவான் அனுமதி வழங்கியதுடன் பிரதிவாதியான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக தெரிவித்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்

பணிபுறக்கணிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!

மண்சரிவு அபாய எச்சரிக்கை