சூடான செய்திகள் 1

இலங்கை அரச தூதுக்குழு இன்று ஜெனிவா பயணம்

(UTV|COLOMBO) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் தலைமையிலான 05 பேர் கொண்ட குழுவினர் இன்று(18) ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளனர்.

குறித்த குழுவில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி மன்றாடியார் நாயகம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கஜ சூறாவளி – யாழ்குடாநாட்டில் அடைமழை

முதலாம் தவணை விடுமுறை இன்று முதல்