(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவகத்தின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்.
சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டமைக்காக எட்வர்ட் ஸ்னோவ்டன் தேடப்பட்டு வந்தவேளையில், ஹொங்கொங்கில் அவர் வசித்து வந்தார்.
இந்த காலப்பகுதியில் மூன்று இலங்கை அகதிகளின் குடும்பங்கள் அவருக்கு அடைக்கலம் வழங்கின.
தற்போது குறித்த இலங்கை அகதிகளுக்கு ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்த்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களது சட்டத்தரணிகளால், குறித்த குடும்பத்தினருக்கு கனடாவில் அகதி அந்தஸ்த்து வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
எட்வர்ட் ஸ்னோவ்டனும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.