சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் குருந்துவத்தை, ஹெட்டேவத்தை பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.  சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோவும் 585 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்…

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

முதல் தடவையாக அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில்