சூடான செய்திகள் 1

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

(UTV|COLOMBO)  வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்க மாலைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மிரிஹானை விஷேட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த நபர்கள் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் பணத் தேவைக்காக இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

 

Related posts

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் யோசனை