விளையாட்டு

மோசமான களத்தடுப்பே தோல்விக்கு காரணம்…

(UTV|AUSTRALIA)நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில்  இடம்பெற்ற நான்காவது ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வி குறித்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

எங்களது களத்தடுப்பு மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாங்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். அவுஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பனி பொழிவு முக்கிய பங்கு வகித்தது.

பனி பொழிவு குறித்து இரண்டாவது முறையாக தவறாக கணித்து விட்டோம். இதனால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. பனி பொழிவு பந்து வீச்சை சேதப்படுத்தி விட்டது.

டர்னர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின போக்கை மாற்றிவிட்டார். இதேபோல் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த சேசிங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அத்துடன் இன்னும் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்.

 

 

 

 

Related posts

ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள் பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சம்

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

மெக்ஸிக்கோ குத்துச்சண்டை வீரர் அல்வரஸூக்கு 6 மாதகால போட்டித்தடை