சூடான செய்திகள் 1

கொழும்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனங்களை செலுத்துவோரை கைதுசெய்யும் நோக்கில் இரவு நேர விடுதிகள் அமைந்துள்ள இடங்களை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர விடுதிக்கு சென்று திரும்புபவர்கள், மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேல் மாகாணம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கடலில் மூழ்கி இளைஞன் பலி

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஆஜரானார்