சூடான செய்திகள் 1

UPDATE-பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் சுட்டுக் கொலை

(UTV|COLOMBO) துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

37 வயதுடைய சமில பிரசாத் கருணாரத்ன எனும் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி மகோல பகுதியில் வைத்து தனுஷ்க சஞ்சீவ எனும் ´மன்னா´ கொலை ​செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.


துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் நவகமுவ, கொடெல்லவத்த பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நவகமுவ பொலிஸ் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து ரி 56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்ளும் ரவைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நிதி அமைச்சரின் அறிவிப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்