வகைப்படுத்தப்படாத

மலாவியில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு – 23 பேர் உயிரிழப்பு…

(UTV|MALAWI) மலாவியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுமார் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இரண்டு பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவம் மற்றும் பொலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்பு பணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த வாரம் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Samoa beat Sri Lanka 65-55

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு