கேளிக்கை

கார்த்தியுடன் இணையும் ஜோ…

(UTV|INDIA) தேவ் படத்தை அடுத்து ரெமோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். கைதி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகர் கார்த்திக்கு இணையான முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை இறுதி செய்யும் பணிகள் முடிந்த பின் விரைவில் படத்தின் மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. ஜீத்து ஜோசப் தமிழில் பாபநாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

அனுஷ்காவை ஏற்க பிரபாஸ் குடும்பம் மறுப்பு

பிரபல பாடகி காலமானார்

ஸ்பைடர் மேன் கைது