விளையாட்டு

வீரர்கள் விளையாட்டை உணர்ந்து விளையாட வேண்டும்…மலிங்கவின் அதிரடி பாய்ச்சல்

இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் லசித்மலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை இலங்கையின் துடுப்பாட்ட  வீரர்கள் உணரவேண்டும் என  தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்  இலங்கை மோசமான தோல்வியை சந்தித்த பின்னர் மலிங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்

முதல் 15 ஓவர்கள் வரை நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை ஆனால் நாங்கள் எங்களை திருத்திக்கொண்டு தென்னாபிரிக்க அணியை 250 ஓட்டங்களிற்கு மட்டுப்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

பந்து வீச்சாளர்கள சிறப்பாக முயற்சி செய்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் நிலைமையை சரியாக புரிந்துகொள்ளவில்லை அவர்களிடம் திறமையுள்ளது அவர்கள் தங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளவேண்டும் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்

நாங்கள் இது குறித்து வீரர்கள் மத்தியில் போதியளவிற்கு கலந்துரையாடிவிட்டோம்,வீரர்கள் தாங்கள் இந்த வாய்ப்புகளை பெறுமதி மிக்கவையாக கருதவேண்டும்  எனவும் மலிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது எனவும் லசித்மலிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மூன்று விருதுகளைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்த விராட்

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெறுகிறாரா?