சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) பத்தரமுல்ல சுஹூறுபாயவில் அமைந்துள்ள சட்டமும் ஒழுங்கும் அமைச்சிற்கு நேற்று (05) நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அங்கு இடம்பெற்ற பொதுமக்கள் தினத்தில் கலந்துகொண்டு தமது முறைபாடுகளை முன்வைப்பதற்காக வருகை தந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை சந்தித்தார்.

பதவி உயர்வு இடமாற்றம் உள்ளிட்ட தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக பொலிஸ் சேவையின் ஆரம்ப தரங்களிலுள்ள உத்தியோகத்தர்கள் அமைச்சிற்கு வருகை தந்திருந்ததோடு அவர்களோடு சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களது முறைபாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
அதனைத் தொடர்நது அமைச்சின் பணிக்குழாமினரை சந்தித்த ஜனாதிபதி பொலிஸ் சேவையின் சகல உத்தியோகத்தர்களும் திருப்தியான மனதோடு தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடமளிக்கக்கூடிய வகையில் அவர்களது சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related posts

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம்

இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று