சூடான செய்திகள் 1

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

(UTV|COLOMBO) அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  உறுதிமொழி மீறப்படுமானால் முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இச் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடன்கொட இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு முறைமையை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

 

 

Related posts

ஹெரோயின் மற்றும் போதை மருந்துகளுடன் 5 பேர் கைது

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்