சூடான செய்திகள் 1

வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி 67 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) வருட தொடக்கத்தில் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதையில் நடந்துசென்றவர்கள் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் ரயிலில் மோதி 570 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் பாதையில் பயணிப்பதானது, ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின்படி, தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனால் ரயில் பாதையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Related posts

காற்றுடன் கூடிய மழை

பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை

இன்று காலை 06 மணியுடன் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நீக்கம்