சூடான செய்திகள் 1

போதைப்பொருள் குற்ற வழக்குகளை விசாரிக்க வேறு நீதிமன்றம்?

(UTV|COLOMBO) போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

இதுபற்றி தான் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல், குற்றங்களை குறைத்தல் தொடர்பான சட்ட வரைபுகள் தொடர்பாக 01.02.2019 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலேயே இந்த புதிய நீதிமன்றத்தையும் தாபிப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

இன்று நாட்டின் அனைத்து மக்களின் கவனம் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதே  இது தொடர்பாக கவனம் செலுத்தி இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முறைமைகளை திருத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வு அதிகார சபை ஒன்றை தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி அவர்களின் தலையீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாடசாலை மாணவர்கள் பாபுல் போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்ற நிலைமை அதிகரித்து வருவது பற்றியும் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், சட்ட ஏற்பாடுகள் இல்லாமை இதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் தடையாக உள்ளதாக பாடசாலை அதிபர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்டறியும் கலந்துரையாடல் ஒன்றை ஏப்ரல் மாதம் 02 திகதி தனது தலைமையில் மீண்டும் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுதார்.

 

 

 

 

Related posts

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்…

மூன்றாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது