சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை  9 மணி முதல் 18 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம், மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதுதவிர, புறக்கோட்டை மற்றும் கோட்டை பகுதிகளில் குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பாராளுமன்ற உறுப்பினர் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பிரதமர் பதவியை மறுத்த அமைச்சர் ராஜித சேனரத்ன