சூடான செய்திகள் 1

நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் மெரிஏன் ஹேகன், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

மேலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்றையும் நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்நாட்டு தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் கூடுகிறது

மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு