சூடான செய்திகள் 1

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கானது எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளத

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டி.ஏ.ராஜபக்ஷ நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க, காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கோத்தபாய உட்பட 07 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !