சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(27) காலை 11 மணியளவில் சிறிகொத்தா ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக குறித்த கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொக்கெய்ன் போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறித்த கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமித்த குழுவின் அறிக்கையானது இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முன் வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

 

 

 

 

Related posts

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு