சூடான செய்திகள் 1

பஸ் வண்டிகளில் ஒலிக்கின்ற பாடல்களை ஒழுங்குறுத்த நடவடிக்கை

 

(UTV|COLOMBO) பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் ஒலிக்கின்ற பாடல்களையும், அவற்றின் சத்தத்தையும் ஒழுங்குறுத்தக் கூடிய விதிமுறைகள் விரைவில் அமுலாகும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாடல்கள் இசைக்க விடப்படும் சத்தத்தின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய டெசிபள் மட்டங்கள் நிர்ணயிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்தார். எத்தகைய பாடல்களை பஸ் வண்டிகளில் ஒலிக்க விடலாம் என்பதை தெரிவுசெய்வதற்காக கலைஞர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விதிமுறைகளை முறையாக அமுலாக்கத் தவறும் நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைது

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

உலக சுற்றாடல் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்