சூடான செய்திகள் 1

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO) கடந்த 2008 – 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பு மற்றும்அதனை அண்டிய பகுதிகளிலிருந்து, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைது செய்யவுள்ளதாக, பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் இதுவரையில், கடற்படை அதிகாரிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் வழக்குத் தொடருமாறு, சட்ட மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், அட்மிரல் கரன்னாகொடவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, கடந்த 21,22ஆம் திகதிகளில், கிருளப்பனை, பெத்தகான பிரதேசங்களில் அமைந்துள்ள கரன்னாகொடவின் வீடுகளுக்கு, பொலிஸார் சென்றுள்ளனர்.

கடற்படைத் தளபதியாக, கரன்னாகொட கடமையாற்றிய காலப்பகுதியில், கடற்படைச் செயலாளராகக் கடமையாற்றிய ரியல் அட்மிரல் ஷியாமல் பெர்ணான்டோ வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, கரன்னாகொடவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் [VIDEO]

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு