வகைப்படுத்தப்படாத

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் மோடி இடையே இன்று சந்திப்பு

(UTV|INDIA) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி இன்று(20) ஆலோசனை நடத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 04 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று(19) இரவு டெல்லி வந்து சேர்ந்தார்.

அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்று ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நாளை

கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

Case against Chief of Defence Staff postponed