சூடான செய்திகள் 1

காற்றானது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 

 

 

Related posts

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்குப் பூட்டு