சூடான செய்திகள் 1

சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மினுவங்கொடை – எசெல்ல பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலவை செய்யப்பட்ட 4438 மதனமோதகம் போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

பிணையில் விடுதலை

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்