கேளிக்கை

அரசியல்வாதியாக சூர்யா?

(UTV|INDIA) செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே’ அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் சமூக வலைதளத்தில் கசிந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உன்ன மாதிரியான ஆளுங்க அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும், கத்துக்குறேன் தலைவரே என அரசியல் வாசனையுடனான வசனங்களுடன் விவசாயம், சமூக பிரச்சனையையும் படத்தில் சொல்லவருவதாக தெரிகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Related posts

மேடை நடிகராக பிரபலமடைந்த செண்டோ ஹெரிஸ் காலமானார்

முதல் காட்சி பார்த்த ரஜினியின் குடும்பம் [PHOTO]

முதலமைச்சராகும் திரிஷா