சூடான செய்திகள் 1

அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறையவில்லை

(UTV|COLOMBO) அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறைந்த பாடாக தெரியவில்லை. இது ஒரு துரதிருஷ்டமான செய்தியாகும். நாம் எந்தளவு கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வத்தை காட்டுகின்றோமோ அந்தளவுக்கு போதைப் பொருள் பாவனையில் இருந்து எமது மாணவர் சமூகத்தைப் பாதுக்காப்பதற்கான கவனத்தைச் செலுத்த வேண்டும்.

இது விடயம் தொடர்பாக அரசாங்கத்தினால் மட்டும் செய்யக் கூடியதொன்றல்ல.சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் இது சம்மந்தமாக கவனம் எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா ஆண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் அதிபர் யூ. எல். எம். மவ்ஜுத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

எமது மாணவர்களின் கல்வி கற்கும் அதேநேரம் விளையாட்டிலும் ஈடுபடுவது முக்கியம். இந்த விளையாட்டுக்கு முக்கிய இடம்கொடுப்பதன் மூலம் மாணவர்களின் மனங்களின் தெளிவு பெறுகின்றன. திறன்கள் விருத்தியடைகின்றன. இவற்றின் மூலம் நுண்ணறிவு விருத்தி பெறுகின்றது. நுண்ணறிவு என்பது பிறப்பினால் வருவது என்று பலர் நினைப்பது பிழையாகும். நுண்ணறி என்பது பயிற்சியினால் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி, மனத்தெளிவினால், திறன்களின் விருத்தியினால் பெற்றுக் கொள்வதாகும். நுண்ணறிவு இல்லாத பரீட்சைகள் எதுவுமே இப்போது இல்லை. எனவே தான் இந்த நுண்ணறிவு இன்று முக்கியமானதாக கொள்ளப்படுகின்றது. கல்விப் புலத்தில் மாணவர்களுக்கான விளையாட்டுகளும், தேகபபயிற்சியும் மிகவும் முக்கிய இடத்தினை பெறுகின்றன. விசேடமாக விளையாட்டு விழாக்களின் மூலம் தான் மாணவர்களின் திறமைகளின் திறனகளின் தேர்ச்சிகளில் முன்னேற்றதின் அளவிட முடியும் விளையாட்டின் மூலம் மாணவர்கள் உற்சாகம் பெறுகின்றனர். தத்தமது அன்றாடக் கடமைகளில் சுறுசுறுப்பை அடைகின்றனர். அதேபோன்று மாணவர்களைத் தாக்கும் நோய்களுக்குரிய எதிர்ப்பு சக்தியினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தமது படிப்புக்குறிய மூளைப் பலத்தினையும் முறையான கற்றல் ஞாபகத்தினையும் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். ஆரம்ப வகுப்புகளில் விளையாட்டின் மூலமே கல்விப் போதனைகள் நடைபெறுகின்றன. இத்தகைய கல்விப் போதனை மூலமே மாணவர்களின் அறிவானது பலமடங்கு அதிகரிக்கின்றது. ஆகவே எமது மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

போதைப பொருட்களின் பாவனையினால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கமாகவும், விரிவாகவும் எமது மாணவர் சமூகத்திற்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பாடசாலைகளின் வாயல்களில் இந்தப் போதைப் பொருள் வியாபாரிகள் நடமாட்டங்கள் நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். இந்த நிலை நீடிக்குமானால் சமுதாயத்தில் பாரிய கலாசார சீரழிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். டி முத்திப், ஜெய்னுலாப்தீன் லாபீர், ஹிதாயத் சத்தார், அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சபா இல்லம் 313 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், ஹம்ரா இல்லம் 301 பெற்று இரண்டாம் இடத்தையும் ஹல்ரா இல்லம் 297 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்

இந்நிகழ்வில் அஞ்சல் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டப் போட்டி, ரில் கண்காட்சி, வேண்ட் வாத்தியக் குவினரின் தேகப் பயிற்சிக் கண்காட்சி, பழைய மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டம், ஆசிரியர்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் பெற்றோர்களுக்கான விளையாட்டு என்பன பல இடம்பெற்றன.

 

 

 

 

 

 

Related posts

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

அமித் வீரசிங்க நாளைய தினம் வரை விளக்கமறியலில்

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது