(UTV-COLOMBO)-யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர் தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் அம்புலன்ஸ் வழங்கப்பட்டன.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டு கோளிற்கிணங்க மன்னார் மாவட்டத்தின் முருங்கன், சிலாவத்துறை, தலைமன்னார் ஆகிய வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட ,வன்னி மாவட்ட எம்.பிக்கள், மாகாண சபை முன்னாள் அமைச்சர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டார்.