கிசு கிசு

மின்தூக்கிகள் 35 வருடகால பழமைவாய்ந்தவை?

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் உள்ள மின்தூக்கி செயலிழந்தமை சதிமுயற்சி இல்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மின்தூக்கி திடீரென செயலிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மின்தூக்கி செயலிழந்தமையை அறிவிப்பதற்கான ஒலி சமிஞ்சை கட்டமைப்பு செயற்படாமை தொடர்பிலும் ஆராயப்படுவதாக படைக்கள சேவிதர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத்தில் காணப்படும் ஒன்பது மின்தூக்கிகளும் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை இந்த வாரம் கோரப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவு பெறும் வரை மின்தூக்கியில் ஒரு தடவையில் செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் காணப்படும் மின்தூக்கிகள் 35 வருடகால பழமைவாய்ந்தவை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

 

Related posts

3 மாத கர்ப்பிணி மாட்டை கற்பழித்த காமுகர்கள்?

பொருளாதாரத்தில் நசுங்கும் இலங்கை

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை