சூடான செய்திகள் 1

நீதிமன்றில் ஒழுக்க விதிகளை கடைபிடிக்காத சந்தேக நபர்களுக்கு கிடைக்கும் தண்டனை!!

(UTV|COLOMBO) ஒழுக்க விதிகளை கடைபிடிக்காது சநதேக நபர்கள் நீதிமன்றிற்கு பிரவேசித்தால் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ எஸ் பி போல் தெரிவித்துள்ளார்.

நல்லூர் முடவாடி பகுதியில் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியமை, வாள் வெட்டில் ஈடுபட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு யாழ் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் தலை முடி வெட்டாது நீதிமன்ற விதிமுறைகளுக்கு அமைவான உடைகளை அணியாது சமூகமளித்திருந்தனர்.

இதனை அவதானித்த நீதவான் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

 

 

 

Related posts

10 மணி நேரம் நீர் விநியோகம் தடை

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சு

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு