(UTV|COLOMBO) ‘சமாதானத்திற்கான வாய்ப்புக்கள், முன்னேற்றம் மற்றும் தென்னாசியாவிலே செழிப்பு’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கொன்று இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகத்தினால் பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் பெப்ரவரி 5 ஆம் திகதி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
தென்னாசிய பிராந்தியத்தில் அபிவிருத்தி,முன்னேற்றம் மற்றும் முரண்பாட்டிற்கான தீர்வூகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கருத்தரங்கிலே கலந்துரையாடப்பட்டது.
பூகோள மற்றும் பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓ) சையத் கஹலித் அமிர் ஜெப்ரிஇ டெய்லி மிரர் பத்திரிக்கையின் மூத்த ஊடகவியலாளர்இ சர்வதேச உறவூகள் தொடர்பான பதிப்பாசிரியர்இ திரு. அமீன் இஸ்ஸதீன் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி சாஹித் அஹ்மத் ஹமத் இக்கருத்தரங்கிலே உரையாற்றினர்.
இக்கருத்தரங்கிலே உரையாற்றுகையிலே திரு. அமீன் இஸ்ஸதீன் தெற்காசிய பிராந்தியம் ஆழமான வரலாற்றுதன்மை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கலாசாரங்களின் மனையாகும் என சுட்டிக்காட்டினார். அபிவிருத்தியின் பிரதான குறிகாட்டிகளான அனைவருக்கும் தரமான வாழ்க்கைஇ வளங்களின் பகிர்விலே நேர்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினை காஸ்மீர் பிரச்சினை உள்ளடங்களாக தென்னாசியாவிலே நிலவூகின்ற முரண்பாடுகளிற்கான தீர்வூகள் மற்றும் பரஸ்பர ஆதரவின்றி அடையமுடியாது என அவர் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் (ஓ) சையத் கஹலித் அமிர் ஜெப்ரி தனது உரையில் காஸ்மீர் பிரச்சினை இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான பிரச்சினை மட்டுமல்ல அது மில்லியன் கணக்கான காஸ்மீரிகளின் சுய-நிர்ணய உரிமையூடன் தொடர்புடைய பிராந்திய மற்றும் சர்வதேசத்தினது பிரச்சினையாகும் என சுட்டிக்காட்டினார்; காஸ்மீர் பிரச்சினைக்கான உரிய தீர்வின்மையின் பாதகமான விளைவூகள் பிராந்திய மற்றும் சர்வதேசரீதியாக உணரப்படுகின்றது. காஸ்மீரிகள் கடந்த ஏழு தசாப்தங்களாக வேதனைப்படுவதுடன் சட்டவிரோத கொலைகளுக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் துஷ்பிரயோகம் மற்றும் அவமரியாதைக்குள்ளாகின்றனர். ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பெல்லட் துப்பாக்கிகளால் குருடாக்கப்படுகின்றனர். சர்வதேச சமூகம் பூரண பொறுப்புடன் இம் மனிதாபிமான பிரச்சினைக்கு பதிலளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி சாஹித் அஹ்மத் ஹமத் தனது முடிவூரையில் பிராந்திய பொருளாதாரங்களின் ஒருங்கிணைவு தற்கால உலகமயமாதல் செயல்முறையில் சமாதானம் செழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்த சிறந்த வழி என குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதிலே ஏனைய பிராந்தியங்களிற்கு சிறந்த முன்மாதிரிகளாக விளங்குகின்றன. சார்க் அமைப்பு மேலும் செயல்திறன்மிக்கதாக மாறினால் தெற்காசிய பொருளாதாரத்தின் இயந்திரமாக உருவாகலாம். ஆனால் காஸ்மீர் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே அது சாத்தியமாகும்.
மேலும் பாகிஸ்தான் அர்த்தப்படியான மற்றும் விரிவான பேச்சுவார்த்தை மூலமாக காமீர் பிரச்சினைக்கான அமைதியான தீர்வினை இந்தியாவிடம் எதிர்பார்க்கின்றது. பிரச்சினைகளுக்கான தீர்வானது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் மூலமே எட்டப்படலாம். அமைதி இல்லையெனில் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை உருவாகாது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையெனில் பொருளாதார முன்னேற்றமும் உருவாகாது என தெரிவித்தார்.
இராஜதந்திரிகள்இ உபவேந்தர்கள்இ பல்கழைக்கழக மாணவர்கள்இ இலங்கை ஆயூதப்படைகள்இ பாகிஸ்தானிய பிரஜைகள்இ அறிஞர்கள் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் அதிகாரிகள் என பல்வேறு துறையினரும் இக்கருத்தரங்கிலே கலந்து கொண்டனர்.
#Pakistan HC organized a seminar ‘Prospects of #Peace,Progress and Prosperity in South Asia’ at BMICH on 5th Feb 2019. Aspects of progress,development and #resolution of conflicts in SA region were discussed. https://t.co/aE549ehdDN @ForeignOfficePk @RadioPakistan @pid_gov pic.twitter.com/zapRlinNPW
— Pakistan High Commission Sri Lanka (@PakinSriLanka) February 6, 2019