கிசு கிசு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய்?

(UTV|COLOMBO) இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றி எண்ணெய், மரக்கறி எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாக ஆய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில் வாணிப பிரதி அமைச்சர் புத்திக பதிரண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பால்மா மாதிரிகளை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கினாலும் அந்த நிறுவனம் பாதியில் ஆய்வுகளை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எத்தகைய அழுத்தம் வந்தாலும் பால்மா என்ற பெயரில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் நச்சுப் பொருட்கள் கலந்த பால்மாக்கள் தொடர்பிலான உண்மையை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை பணம் செலுத்தி தனியார் நிறுவனம் ஒன்றினூாடாக விசாரணை நடத்தியது. ஆனால்,அந்த கம்பனி சில வாரங்களில் விசாரணையை பாதியில் கைவிட்டது. பால்மா கம்பனிகளின் அழுத்தம் காரணமாக விசாரணை கைவிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாய்மூல விடைக்காக விஜித ஹேரத் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் சந்திம வீரமக்கொடி, நாமல் ராஜபக்ஷ, எஸ்.எம்.மரிக்கார், விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்டு சார்பாக கருத்துக்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

தனஞ்சயவின் தந்தை படுகொலை : சந்தேக நபர் கைது

பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது