வகைப்படுத்தப்படாத

தெருக்களில் உலாவரும் முதலைகள்…

(UTV|AUSTRALIA) ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் வரலாறு காணாத பருவ மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக குவின்ஸ் லெண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வீடுகள், பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். சிலர் தங்களின் வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்வதால் குவின்ஸ் லேன்டில் உள்ள அணை திறந்து விடப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய நீர் கைரனஸ், டவுன்ஸ்வில்லே பகுதிகளில் பாய்ந்து செல்கிறது. கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன.

அணைகளில் இருந்த முதலைகள் வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும், உலாவருகின்றன. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவும், மின்சார வெட்டும் நிலவுகிறது. தொடர்ந்து வெள்ளம் அதிகரிப்பதையடுத்து மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.

எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார்..!!