சூடான செய்திகள் 1

இரு நாட்டு தலைவர்களிடையிலான சந்திப்பு

(UTV||COLOMBO) இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விஷேட அதிதியாக வருகை தந்த மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் இன்று (05) ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாள் அரச சுற்றுலாவிற்காக ஜனாதிபதியின் அழைப்பிற்கு அமைய மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தனர்.

அவர் நேற்று (04) இடம்பெற்ற இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தில் விஷேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் இன்று அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்