வகைப்படுத்தப்படாத

வெனிசூலாவில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

(UTV|VENEZULEA) வெனிசூலாவில் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிக்கலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் எனவும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துமாறும் எதிர்த்தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் கரகாஸில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

வெனிசூலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ, தம்மைத் தாமே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்ததையடுத்து அங்கு அரசியல் ரீதியில் பதற்றகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

குவைடோவினால் கடந்த மாதம் 23 ஆம் திகதி இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டதுடன், அதனை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரித்துள்ளன.

இந்நிலையில், தெடர்ந்தும் தாமே நாட்டின் ஜனாதிபதி என நிக்கலஸ் மதுரோ தெரிவித்துள்ளதுடன், பாராளுமன்றத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.

வெனிசூலாவில் அண்மையில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அனைத்து வேட்பாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டமையே காரணத்தினால் குறித்த தேர்தலில் எந்தவொரு எதிர்க்கட்சி வேட்பாளர்களும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக செயற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் குவைடோ அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, பாராளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பினை ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Ceylon Tea global promotional campaign to kick-start in Russia

வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்

IGP’s FR petition to be considered on Sep. 17