வகைப்படுத்தப்படாத

400க்கும் அதிக பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|THAILAND)-தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் வளி மாசடைந்துள்ளமை காரணமாக தாய்லாந்து தலைநகரின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வளி மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையிலும், பெற்றோரினால் தனியார் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்துவதனை தவிர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இந்த வளி மாசடைவானது எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடரும் என அதிகாரிகள் கூறியதையடுத்து, சுமார் 437 பாடசாலைகளை மூடுமாறு அந்நாட்டு பிரதமர்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மக்கள் தமது வௌிப்புற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு, அந்நாட்டு பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஹிக்கடுவயில் துப்பாக்கி பிரயோகம்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

Fuel Pricing Committee to convene today