சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கு 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும்

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் அரசியல் செல்வாக்கு மற்றும் பல்வேறுப்பட்ட காரணங்களால் இந்த நடைமுறையை பின்பற்ற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வருட கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட செயற்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

26 தொழிற்பயிற்சி பாடங்களை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்தாலோ அல்லது சித்தியடையாவிட்டாலோ தங்களுக்கான தொழிற்துறையை தேடிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாணவர்களும் தங்களது திறமைகளை இனங் கண்டு கொள்ள வேண்டும்.

அந்த திறமையுடன் தொடர்புபட்ட தொழில் பயிற்சிகளை முன்னெடுக்கும் போது வாழ்கையை வெற்றி கொள்ள முடியும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி