சூடான செய்திகள் 1

தொழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில்

(UTV|COLOMBO)-நாட்டில் மொத்த தொழு நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683.

இவர்களில் 40 சதவீதத்திற்கு மேலானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் புதிதாக ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். நோய் அறிகுறிகள் தோன்றி ஆறுமதங்கள் தாமதித்து சிகிச்சைக்காக வந்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நோய் குறித்து மக்கள் மத்தியில் போதிய அறிவின்மை காரணமாக இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழு நோய் பக்டீரியா நுண்ணுயிர் மூலம் பரவுவதாகவும். சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இருந்து தொழு நோய் பரவ மாட்டாது. புதிய சிகிச்சைகள் மூலம் தொழு நோயை முற்றாக குணப்படுத்தலாம் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்