சூடான செய்திகள் 1

42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|JAFFNA)-யாழ். நாவாந்துறை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த போதே குறித்த கஞ்சா தொகையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று (30) இரவு 7 மணியளவில் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு