சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

(UTV|COLOMBO)-நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையும்) காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடும்.

ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளது!

ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு